Home இலங்கை சமூகம் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு கிடைத்த ‘ஜனாதிபதி விருது’!!

றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு கிடைத்த ‘ஜனாதிபதி விருது’!!

0

சுற்றுப்புறச் சூழலுக்கான ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் (Presedent Environment Awards – 2024) றீ(ச்)ஷா (ReeCha) ஒருங்கிணைந்த பண்ணைக்கு வெண்கல விருது (Bronze Award) வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு (Colombo)- பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (28) குறித்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையால் (Central Environmental Authority) நடாத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

றீ(ச்)ஷாவின் வெற்றி 

இதேவேளை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இவ்வைபவத்தில் விருதுகளைப் பெற்றுக் கொண்டன.

இவ்வெற்றிக்காக உழைத்த றீ(ச்)ஷா நிறுவனத்தின் இயக்குநர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/presidential-award-for-reecha-organic-farm-1719656986

NO COMMENTS

Exit mobile version