மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேயை (Nuwan Bopage) ஆதரித்து யாழில் (Jaffna) தேர்தல் பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரச்சார நடவடிக்கமையானது இன்று (21) காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் போராட்ட முன்னணி
இதன்போது மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே (Wasantha Mudalige), புதிய சனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர்
சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களை வழங்கியிருந்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள சரத் பொன்சேகாவின் (sarath fonseka) பிரசார கூட்டத்திற்கு எவரும் வராதமை தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.
தனது பிரசார முயற்சிகள் நேர்மையானவை எனவும் பொதுக் கூட்டணிக்கு போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், மது அல்லது சாப்பாடு கொடுத்து மக்களை பேருந்துகளில் அழைத்து வரவில்லை
என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.