சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SlPP) அதிபர் வேட்பாளர் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.
விஜயராமவில் (Vijayarama) நேற்று (24) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்சியின் அதிபர் வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றதாக சுட்டிக்காட்டினார்.
மகிந்தவின் சிந்தனைக்கு ஆதரவு
அத்துடன், உரிய நேரத்தில் வேட்பாளர் தொடர்பான தீர்மானத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுன வெளியிடும் என ரோஹித்த அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
மேலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்படும் அல்லது ஆதரவு வழங்கப்படும் வேட்பாளர் மகிந்த சிந்தனையுடன் இணங்கி அதன் கொள்கைகளுடன் செயற்படும் ஒருவராக இருப்பது அவசியம் என அகில இலங்கை செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் அகில இலங்கை செயற்குழு மற்றும் அரசியல் சபைக் கூட்டம் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையில் நேற்று நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.