கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களும் நாளைக்குள் தங்கள் செலவுக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் 39 பேர் பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தியும், சுயேட்சையாகவும் களமிறங்கி வேட்பாளர்களாக போட்டியிட்டு இருந்தனர்.
சட்ட நடவடிக்கை
இந்நிலையில் தேர்தல் முடிவடைந்தவுடன் அவர்கள் தங்கள் செலவுக் கணக்கு விபரங்களை மூன்று வார காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டுமென்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியிருந்தது.
எனினும் தற்போதைக்கு எட்டுப் பேர் மட்டுமே அவ்வாறு தங்கள் செலவுக் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.
இதுவரை தங்கள் செலவுக் கணக்கை சமர்ப்பிக்காத ஏனையோருக்கு நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கத் தவறும் சகலருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.