Home இலங்கை அரசியல் தென்னிலங்கையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – வெற்றி பெறப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்

தென்னிலங்கையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – வெற்றி பெறப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்

0

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார் என்பது குறித்து நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.

வழமையாக ஜனாதிபதி தேர்தலில் பிரதான இரண்டு கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மத்தியில் கடும் போட்டித்தன்மை காணப்படும்.

எனினும் இம்முறை மும்முனை மோதலாக அது மாறியுள்ளது. ரணில், சஜித், அநுர என்ற மூன்று தரப்பினருக்கும் இடையில் கடும் போட்டி நிலை காணப்படுகிறது.

தேர்தல் களம்

நாமல் ராஜபக்ச தேர்தல் களத்தில் இருந்தாலும், பரீட்சார்த்த போட்டியாக அவர் இதனை கருதுகின்றார். இதில் வெற்றி பெற முடியாது என்பது அவருக்கும் தெரிந்திருந்தாலும் ஒத்திகை போட்டியாக இது மாறியுள்ளது.

இம்முறை ஜனாதிபதி முடிவுகள் விருப்பு வாக்கின் அடிப்படையில் கூட தீர்மானிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதற்கு தயார் நிலையில் இருக்குமாறும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் பிரதான மூன்று வேட்பாளர்களும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். இதன் பின்னர் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த வாரம் முதல் மாற்றம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக பிரச்சாரம் செய்து வரும் ஜனாதிபதி வேட்பாளர் முன்னிலை வகித்து வந்தார். எனினும் அவருக்கான ஆதரவு குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேர்தல் விஞ்ஞாபனம்

எனினும் சிறுபான்மை இனமாக முஸ்லிம் சமூகத்திடம் அவருக்கான ஆதரவு வலுப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, கடந்த வாரம் வரையில் இரண்டாம் நிலையில் காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மகனுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வருவதுடன் வெற்றிக்கான வாய்ப்பு உள்ளதாகவும் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைக்குமானால் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

மறுபுறத்தில் மீட்டெடுத்த பொருளாதாரத்தை தொடர்ந்தும் வலுப்படுத்த ஆணையை கேட்டு வரும் ஜனாதிபதி வேட்பாளர் பாரிய பின்னடைவை கண்டிருந்தார்.

எனினும் அண்மைய பெறுபேறுகளுக்கு அமைய அவரின் செல்வாக்கும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

மேற்குலகின் தலையீடு

அடுத்து வரும் சில தினங்களால் தென்னிலங்கையில் அரசியல் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதன் பின்புலத்தில்  பலம்பொருத்திய மேற்குலக நாடுகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான மாற்றம் ஒன்று ஏற்படுமாயின் அது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளருக்கு பாரிய எழுச்சியை ஏற்படுத்தி, வெற்றிக்கான பாதைக்கு இட்டுச் செல்லும்.

ஆனாலும் பொருளாதார மீட்பரின் நெருங்கிய சகாக்கள் தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் பல்வேறு மோசடிகள், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை மக்கள் முற்றாக புறக்கணிக்க  ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக அவரின் வெற்றி நிச்சயமற்றதாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version