எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்திய 39 வேட்பாளர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஏனைய 23 பேர் மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முப்பத்தெட்டு வேட்பாளர்களில் பதினைந்து வேட்பாளர்களே கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.
முகநூல் கணக்குகூட இல்லை
எஞ்சிய இருபத்து மூன்று பேரில் மூவர் பற்றிய தகவல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அவர்கள் அழைத்தபோது, மூன்று பேரில் இருவர் வேறு நபர்களின் சார்பாக அழைக்கப்பட்டதாகவும், இருபத்து மூன்று பேரில் குறைந்தது ஐந்து பேருக்கு சமூக ஊடகங்களின் கீழ் முகநூல் கணக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கூட அறிவிக்கவில்லை
சில வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக ஊடகங்களுக்கு கூட அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
38 தேர்தல் வேட்பாளர்களின் புகைப்படங்களை தமது அமைப்பின் இணையதளத்தில் வெளியிட முயன்றபோது, பதினைந்து பிரசாரகர்களைத் தவிர மற்ற 23 பேரிடம் அவற்றைப் பெற முடியவில்லை என்றும் அவர்கள் பேசக்கூட வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.