Home அமெரிக்கா எதிர்காலத்திற்கான போராட்டமே ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிஸ்

எதிர்காலத்திற்கான போராட்டமே ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிஸ்

0

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ்(Kamala Harris) எதிர்காலம் எப்பொழுதும் போராடுவதற்கு தகுதியானது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் ஜார்ஜியாவில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட அவர் பலவித கருத்துக்களை கூறியுள்ளார்.

கடினமான வேலைகள்

தற்போதைய ஜனாதிபதி போராட்டம் அமெரிக்காவின் எதிர்காலத்திற்கானது என்றும், எதிர்காலம் எப்போதும் போராடத் தகுந்தது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இன்னும் 68 நாட்கள்.உண்மையைப் பேச நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

நாங்கள் கீழ்நிலையில் இருந்து ஓடுகிறோம் என்பது எங்களுக்கு தெரிந்த ஒன்று. எங்களுக்கு முன்னால் சில கடினமான வேலைகள் உள்ளன. ஆனால், நாங்கள் கடின உழைப்பை விரும்புகிறோம்.

கடின உழைப்பு. உங்கள் உதவியால் இந்த நவம்பரில் வெற்றி பெறுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடுமையான சண்டைகள் எனக்கு புதிதல்ல; நான் ஒரு நீதிமன்ற வழக்கறிஞராக இருந்தேன். துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளும் முதியவர்களுக்காகவும் நின்றேன் எனவும் கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version