Home இலங்கை அரசியல் வவுனியாவில் சுமுகமாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல்

வவுனியாவில் சுமுகமாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தல்

0

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில் வவுனியாவில் (Vavuniya) காலை 10 மணிவரை 30
வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசஅதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி
அலுவலருமான பி.எ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வாக்களிப்பு நிலையங்கள் 

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் காலை
முதல் மக்கள் ஆர்வத்துடன் தமது ஜனநாயக கடமையினை ஆற்றிவருவதை அவதானிக்க
முடிகின்றது.

குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளதுடன் 128,585 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இதுவரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அசம்பாவிதங்கள் எவையும்
இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்பு செயற்ப்பாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

வாக்கு எண்ணும் பணிகள் 

இதேவேளை வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் வாக்கெண்ணும் பணிகளுக்கான
அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

மாலை 6 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை காலை 10மணி வரை 30 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதுடன்  பாதுகாப்பு கடமைகளில் காவல்துறையினர் மற்றும் ஊர்காவற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.” என தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version