ஊழல்வாதிகளையும் நண்பர்களையும் உள்ளடக்கிய அரசியல் கலாச்சாரத்தை முழுமையாக ஓரங்கட்டி பொது மக்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஆட்சியின் யுகத்தை நிச்சயமாக நாங்கள் உருவாக்குவோம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
மாவனெல்லை நகரில் இன்று (19) இடம்பெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதாரம் வலுப்பெறுவதின் ஊடாக பொதுமக்களுக்கான
சலுகைகள் இன்று கிடைக்கப்பெறவில்லை. பொதுமக்களின் பொருளாதாரத்தை
மட்டுப்படுத்தி ஆட்சி அதிகாரத்தை முன்னெடுக்கவே தற்போதைய ஜனாதிபதி உள்ளிட்ட
ஆட்சியாளர்கள் முற்படுகின்றார்கள்.
பொதுமக்களின் வாழ்க்கை
இன்று சேற்றிலே கால் வைத்து வாழ்கின்ற
பொதுமக்களின் வாழ்க்கை இன்றைய பதில் ஜனாதிபதிக்கு முக்கியத்துவமாக
அமைவதில்லை. நாட்டிலே வாழ்கின்ற முக்கிய செல்வந்தர்கள் மாத்திரமே அவருக்கு
முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.
இன்று நாட்டில் பிரித்தாள்கின்ற ஆட்சி முறை காணப்படுகின்றது. இனரீதியாக, மத
ரீதியாக, கட்சி ரீதியாக, குலம் கோத்திரமாக, வகுப்பு ரீதியாக இன்று நாடு
பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறது. இலங்கை நாடு விழுந்திருக்கிற
பாதாளத்திலிருந்து மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
நாட்டிலுள்ள அனைத்து கிராமங்கள் நகரங்களையும் ஒன்றாக இணைக்கின்ற பாரிய
அரசியல் சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும்
காணப்படுகின்றது. நான்கு இன மக்களையும் மையப்படுத்தி இலங்கைத்துவமாக
ஒன்றிணைய வேண்டும்.
[YTSZ5FS
]
கையாளாகாத அரசாங்கம்
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் காரணமாக மக்கள் வரத்தினால்
கொண்டுவரப்படுகின்ற அரசாங்கத்தினால் எதுவும் செய்ய முடியாது என்று தற்போது
அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
மக்கள் வரத்தைப் பெற்றுக்
கொண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் மனிதாபிமான முறையில் ஒப்பந்தம் ஒன்றின்
ஊடாக நாடு என்ற வகையில் எம்மால் முன்னோக்கிச் செல்ல முடியும்.
கடன் மீள
செலுத்துதலை 2033 ஆம் ஆண்டு ஆரம்பிக்குமாறு சர்வதேச நாணய நிதியம்
குறிப்பிட்டு இருக்கிறது. 2028 ஆம் ஆண்டு முதல் கடனை மீள் செலுத்துவதற்கு
இந்த கையாளாகாத அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கிறது.
அரசியல் பழிவாங்கல்
அதேபோன்று 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி
இருக்கிறார்கள். ரணில் விக்ரமசிங்கவிற்காகவும் (Ranil Wickremesinghe) எமக்காகவும் அர்ப்பணிப்புடன்
செயல்பட்ட 40,000 பேர் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அவர்களின் தொழில்கள் இல்லாது போய் இருக்கின்றன. அரசியல் பழிவாங்கல்களுக்கு
உள்ளாகி ஆதரவற்றுப் போய் உள்ள அனைவருக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க
ஐக்கிய மக்கள் கூட்டணி அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.