Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் 2024: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் 2024: தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தினை தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஜனாதிபதி தேர்தல்

21-ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும்.

நாடு முழுவதிலும் 13,417 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு செய்ய முடியும்.

தேர்தலில் வெற்றி ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு பத்து முதல் 12 நாட்களில் நாடாளுமன்றை கலைக்க முடியும்.

இவ்வாறு நாடாளுமன்றை கலைத்து 35 முதல் 44 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும்.

நாடாளுமன்றின் பதவிக்காலம்

தேவை ஏற்பட்டால் தேர்தல் நடாத்துவதற்காக அதிகபட்சமாக 52 முதல் 66 நாட்களை எடுத்துக்கொள்ள முடியும்.

இவ்வாறு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்றை கலைக்க முடியும்.

அல்லது தற்போதைய நாடாளுமன்றின் பதவிக்கால நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version