Home இலங்கை அரசியல் யாழ் . மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் போட்டி : சீ.கா செந்தில் வேல்

யாழ் . மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் போட்டி : சீ.கா செந்தில் வேல்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் போட்டி போடுகின்றோம் என சீ.கா செந்தில் வேல் தெரிவித்துள்ளார்.

மக்கள் போராட்ட முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் (17) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த சீ.கா செந்தில் வேல், “பொதுத் தேர்தலில் நாங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டுமல்லாமல் நாடளாவிய ரீதியில் போட்டி போடுகின்றோம்.

மக்கள் போராட்ட முன்னணி

நாங்கள் ஒரு மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து ஐக்கிய முன்னணியாக இந்த தேர்தலில் போட்டிபோடுகின்றோம்.

முன்னிலை சோசலிச கட்சி, சோசலிச மக்கள் மன்றம், புதிய மார்க்சிச ஜனநாயக லெனின கட்சி, மற்றும் அரகலய எனக் கூறப்படும் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து நாங்கள் இந்த கூட்டணியாக தேர்தலில் போட்டி போடுகின்றோம்.

எங்களுடைய சின்னம் குடைச்சின்னம். ஜனாதிபதி தேர்தலிலும் அதே சின்னத்தில் மக்கள் போராட்ட முன்னணி போட்டியிட்டு இருந்தது.

இந்த பொதுத் தேர்தலில் ஏன் நாங்கள் பங்கு கொள்கிறோம் என்றால் ஒரு வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும்.

வங்குரோத்து நிலை

76 வருடங்களாக நாடாளுமன்ற அரசியலிலே தலைமை தாங்கி ஆட்சியின் பக்கமும் எதிர்க்கட்சி பக்கமும், இருந்து வந்த பாரம்பரிய ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, அதற்குப் பின்னர் வந்த பொதுஜன பெரமுன என்ற மொட்டுக் கட்சி இவர்கள்தான் கடந்த காலங்களில் ஆட்சி செய்து வந்தார்கள். 

இவர்கள் யார் என்றால், மிகவும் சொத்து சுகம்படைத்த மேட்டுக்குடி உயர் வர்க்கத்தைச் சேர்ந்த கட்சிகள்தான் நாடாளுமன்றத்தை அலங்கரித்து இருந்தன.

அதன் மூலம்தான் அவர்களுடைய 76 வருட நாடாளுமன்ற ஆட்சியும், 45 வருட கால ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையும் எங்கள் நாட்டை முற்றும் முழுதாக ஒரு வங்குரோத்து நிலைக்கு விட்டு சென்றுள்ளது” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version