Home இலங்கை சமூகம் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நிறுத்தப்படவில்லை: துரைரெட்ணம் சுட்டிக்காட்டு

பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நிறுத்தப்படவில்லை: துரைரெட்ணம் சுட்டிக்காட்டு

0

வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் பயங்கரவாத தடைச்
சட்டம் நிறுத்தப்படவில்லை என
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

அவரது அலுவலகத்தில் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் குறிப்பாக வடக்கு – கிழக்கை இயற்கை அனைத்தும் வெள்ளம் முழுமையாக
சுவிகரித்துக் கொண்டது.

இயற்கை அனர்த்தம்

இந்த விடயத்தில் இந்த அனர்த்தங்கள் தொடர்பாக புதிய
தொழில்நுட்பங்கள் வளர்ந்திருக்கும் காலகட்டத்தில் குறிப்பாக மட்டக்களப்பு
மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அழிவுகளை
தடுத்திருக்க முடியும் என மக்கள் கூறுகின்றார்கள்.

குறிப்பாக இந்த மாவட்டத்தில் அனர்த்தங்கள் இடம்பெறப் போகின்றது என ஒரு
கிழமைக்கு முன்னரே பலருக்கு தெரிந்த விடயம்.

அரசு நிர்வாக கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட அரசு
நிர்வாகம் கூட அனர்த்த முகாமைத்துவத்திற்கு உரிய கூட்டங்களை மூன்று நான்கு
தினங்களுக்கு முன்னரே நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் நன்றாக தெரியும் உதாரணமாக இக்னியாகள குளம், நவகிரி குளம்,
அடைச்சக்கல்குளம், கண்டியனாரு குளம், உன்னிச்சை குளம், புணானையுடன் தொடர்புடைய
குளம், உறுகாமம் ஆகிய குளங்கள் திறந்தால் வழக்கமாக பல பகுதிகள் பாதிக்கப்படும்” என்றார்.

NO COMMENTS

Exit mobile version