Home உலகம் பீரங்கி குண்டை பொம்மை என நினைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

பீரங்கி குண்டை பொம்மை என நினைத்து விளையாடிய சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

0

பாகிஸ்தானில் (Pakistan) பீரங்கி குண்டு வெடித்ததில் இரண்டு சகோதரர்கள் உள்பட மூன்று சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த சம்பவம் பாகிஸ்தானில் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் மதப்பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது கைவிடப்பட்ட பீரங்கி குண்டு ஒன்று கிடந்துள்ளது.

குழந்தைகளின் உடல்கள்

அதை அவர்கள் பொம்மை என்று நினைத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக அது வெடித்ததில் சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உயிரிழந்த குழந்தைகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version