Home இலங்கை அரசியல் அநுரகுமாரவே நாட்டில் உருவான மிகவும் வெற்றிகரமான ஜனாதிபதி

அநுரகுமாரவே நாட்டில் உருவான மிகவும் வெற்றிகரமான ஜனாதிபதி

0

 நாட்டில் உருவான மிகவும் வெற்றிகரமான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் நாட்டிற்கு கிடைக்கப் பெற்ற மிகச் சிறந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான ஓர் ஜனாதிபதியை பாதுகாத்துக் கொள்ள அனைத்து வகையிலான உத்திகளையும் கையாள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மேற்கொள்ளப்படும் உத்திகள் எதுவும் நியாயமற்றதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியை பாதுகாக்கும் நோக்கில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமாரவின் பாதுகாப்பு தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக ஜனாதிபதியினதும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

பாதுகாப்பு தேவையில்லை என கூறி ஆட்சி பீடம் ஏறிய தற்போதைய அரசாங்கப் பிரதிநிதிகள் பாதுகாப்பு பெற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version