Home இலங்கை சமூகம் கட்டுப்பணம் செலுத்திய சில வேட்பாளர்கள் குறித்த உண்மையை அம்பலப்படுத்திய மகிந்த தேசப்பிரிய

கட்டுப்பணம் செலுத்திய சில வேட்பாளர்கள் குறித்த உண்மையை அம்பலப்படுத்திய மகிந்த தேசப்பிரிய

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள் தொடர்பில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய  (Mahinda Deshapriya) கருத்து வெளியிட்டுள்ளார்.

கட்டுப்பணம் செலுத்திய சிலர் பிரதான வேட்பாளர்களின் பதிலாள் வேட்பாளர்களாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய ஒழுங்குவிதிகள்

சில சுயாதீன வேட்பாளர்கள் பிரதான வேட்பாளர் ஒருவருடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஒழுங்குவிதிகள் அல்லது வரையறைகளின் மூலம் இந்த முறைமையில் மாற்றம் செய்யப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு மாகாணசபை மற்றும் பொதுத் தேர்தல்களிலும் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் 32 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். 

You may like this,

NO COMMENTS

Exit mobile version