Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்தினால் இரத்த ஆறு ஓடும் – மைத்திரி

ஜனாதிபதி தேர்தலை காலம் தாழ்த்தினால் இரத்த ஆறு ஓடும் – மைத்திரி

0

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலை காலம் தாழ்த்தினால் இரத்த ஆறு ஓடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் சாசனத்தின் பிரகாரம் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது எனவும் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிக்குள் குழப்பம்

மேலும், தேர்தலுக்கு நாம் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கட்சியின் உறுப்பினர்களுக்கு சொந்தமானது எனவும், கட்சி என்பது கொள்கைகளின் அடிப்படையிலானது என அவர் தெரிவித்துள்ளார்.

  

அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு கட்சிக்குள் குழப்பம் விளைவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்

கொள்கை அடிப்படையில் கட்சிக்கு உரிமையில்லாதவர்கள் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியை கைப்பற்றிக் கொள்ள முயற்சிப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவார் எனவும், ஏற்கனவே வேட்பாளரை தெரிவு செய்துள்ளதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version