Home இலங்கை சமூகம் நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு: வரிசைகளில் மக்கள்

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு: வரிசைகளில் மக்கள்

0

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதால் அரசாங்கம் நடமாடும் சேவை அறிமுகப்படுத்திய உள்ள நிலையில், கொழும்பில் தேங்காயை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் நின்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகின்றது.

நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே (Saman Devake) தெரிவித்துள்ளார்.   

தென்னை பயிர்ச்செய்கை சபையில் நேற்றையதினம் (23.10.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளளார்.

தேங்காய் உற்பத்தி

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தென்னைச் செய்கைக்கு தென்னை உரங்கள் மற்றும் இரசாயனங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாததாலும், ஏற்றுமதிக்கான உலர் தேங்காய் உற்பத்தி அதிகரிப்பதாலும், வெள்ளைப் பூச்சியால் ஏற்பட்ட பாதிப்புகளாலும், இலங்கையில் நுகர்வுக்கு வழங்கப்படும் தேங்காய் அளவு குறைந்துள்ளது. 

இது தேங்காய் உற்பத்தித்திறன் சுமார் 50 வீதத்தால் குறைந்துள்ளதாக காணப்படுகிறது. மேலும், இந்தோனேஷியா (Indonesia), பிலிப்பைன்ஸ் (Philippines) போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உலர் தேங்காய்க்கான தேவை குறைந்துள்ளதால், உலக சந்தையில் இந்த நாட்டில் காய்ந்த தேங்காய்க்கான தேவை அதிகரித்துள்ளது.

இந்நாட்டின் வருடாந்த தேங்காய் உற்பத்தி 3000 மில்லியன் கோடி எனவும் அதில் 60 தொடக்கம் 70 வீதம் உள்ளூர் பாவனைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் மீதமுள்ள தொகையை தொழிற்சாலை தேவைகளுக்காக பயன்படுத்துவதாகவும் தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே தெரிவித்துள்ளார்..

NO COMMENTS

Exit mobile version