Home இலங்கை பொருளாதாரம் உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

உலக சந்தையில் எரிபொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 63.63 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில், WTI கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 59.75 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

விலை அதிகரிப்பு

இதேவேளை, ரஷ்யாவின் கச்சா எண்ணெயை அதிகமாக வாங்கும் இந்தியாவும் சீனாவும், ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீதான அமெரிக்காவின் புதிய தடைகளைத் தொடர்ந்து, எண்ணெய் வாங்குவதை கணிசமாகக் குறைத்துள்ளன.

இது ஆசியாவில் ரஷ்ய யூரல்ஸ் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் இடையேயான விலை இடைவெளியை ஒரு வருட உயர்வாக உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version