Home இலங்கை அரசியல் சஜித் – அநுர வந்தால் மீண்டும் அழிவு…..! கடும் தொனியில் எச்சரிக்கும் ரணில்

சஜித் – அநுர வந்தால் மீண்டும் அழிவு…..! கடும் தொனியில் எச்சரிக்கும் ரணில்

0

சஜித் – அநுரவிடம் நாட்டை ஒப்படைத்தால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சி அடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்துள்ளதுடன் பொருட்களின் விலை குறைவடைய உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று (11.9.2024) புதன்கிழமை நடைபெற்ற ‘ரணிலால்
இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி

ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில், 2022 ஆம் ஆண்டு
அத்தியாவசியப் பொருட்கள் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. மின்சாரமும்
இருக்கவில்லை. கஷ்டங்களுடன் வாழ்ந்தோம். பெண்கள் அதனை மறந்திருக்க
வாய்ப்பில்லை.

அன்று இப்போதிருக்கும் முன்னேற்றம் கிட்டும் என்று
நினைக்கவில்லை.

அநுரவும் சஜித்தும் அன்று இருக்கவில்லை.

ஆனால், நான் ஏற்றதால் நாட்டில்
தட்டுப்பாடுகள் நீங்கி நல்ல நிலைமை காணப்படுகின்றது. அதனால் மக்கள் சுமுகமாக
வாழ முடிந்துள்ளது.

அன்று பொருட்களின் விலை அதிகரித்துக் காணப்பட்டது.
ரூபாவின் பெறுமதி பெருமளவில் அதிகரித்திருந்தது.

இன்றும் மக்கள் வாழ்க்கை சுமைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

மக்கள் மீது சில சுமை

இருப்பினும்
எனது முயற்சிகள் ரூபாவின் பெறுமதியை அதிகரிக்கச் செய்தமையால் ஓரளவு சுமுகமான
நிலைமை வந்திருக்கின்றது. பொருட்களின் விலையும் குறைந்திருக்கின்றது. விலையை மேலும் குறைப்பதற்கான வேலைத்திட்டங்ககள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே மக்கள் மீது சில சுமைகளை சுமத்த
வேண்டியிருந்தது. இன்றைய சிறுவர்களுக்கு 25
வயதாகும் போது அவர்கள் முன்னேற்றமடைந்த நாட்டில் வாழ வேண்டும் என்பதே எமது
இலக்காகும்.

சஜித்தினாலும், அநுரவினாலும் அதனைச் செய்ய முடியாது. வாய் பேச்சினால் எவர்
வேண்டுமானாலும் சாதிக்கலாம். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவர்களால்
முடியாது.

எனவே, பொருளாதார வீழ்ச்சியை விரும்பாதவர்கள் செப்டெம்பர் 21 ஆம்
திகதி சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால் சிலிண்டரும்
இருக்காது, திருக்கோவிலுக்கு அபிவிருத்தியும் கிட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version