Home இலங்கை பொருளாதாரம் மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

0

நாட்டில் இன்று முதல் (06) நடைமுறைக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி உருளைக்கிழங்கு, கோதுமை மா, வெள்ளை கௌபி, சிவப்பு கௌபி, காய்ந்த மிளகாய், நெத்தலி, கடலைப் பருப்பு ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து லங்கா சதொச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக 

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

புதிய விலைகள்  

உருளைக்கிழங்கு 75 ரூபா குறைக்கப்பட்டு 350 ரூபாவிற்கும், கோதுமை மா 5 ரூபாவினால் குறைப்பட்டு 190 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.

வெள்ளை கௌபி 110 ரூபாவினால் குறைப்பட்டு 990 ரூபாவிற்கும் சிவப்பு கௌபி 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு 950 ரூபாவிற்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காய்ந்த மிளகாய் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 780 ரூபாவிற்கும், நெத்தலி 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 930 ரூபாவிற்கும் விற்கப்படும்.

அத்துடன் கடலைப் பருப்பு 15 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக லங்கா சதேச நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம் : வெளியான மகிழ்ச்சி தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

NO COMMENTS

Exit mobile version