Home இலங்கை அரசியல் நடத்திக் காட்டுவோம்…! யாழ்ப்பாணத்தில் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

நடத்திக் காட்டுவோம்…! யாழ்ப்பாணத்தில் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

0

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) நேற்று
(11) விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 06 மாத காலப்பகுதியில் 03 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவது தேர்தலாக மாகாண சபை தேர்தலை நடத்த தமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

பண்டிதர்கள் மற்றும் கல்விமான்கள் 

இந்த மண்ணில் பல திறமையானவர்களும் பண்டிதர்களும், கல்விமான்களும் தோற்றம் பெற்றார்கள். அவர்கள் பல்வேறு காரணங்களால் நாட்டை விட்டுச்சென்றுள்ளனர்.

இவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்புவார்கள் என நாம் நம்புகிறோம். ஆதற்கான சூழலை நாம் ஏற்படுத்திக்கொடுப்போம்.

மேலும், மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு தேவையான முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.  

https://www.youtube.com/embed/69VBjwtukBQ

NO COMMENTS

Exit mobile version