Home இலங்கை அரசியல் நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர் அநுரவிற்கு முன் உள்ள சவால்

நாடாளுமன்றம் கலைப்பதற்கு முன்னர் அநுரவிற்கு முன் உள்ள சவால்

0

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு முன்னர் பிரதமரும் அமைச்சரவையும் நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர(Kushani Rohanadheera), குறைவாக அமைச்சர்கள் நியமிக்கப்படுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு நான்கரை வருடங்களின் பின்னர் எந்த நேரத்திலும் கலைக்கப்படலாம்.அதாவது திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்தவுடன் கூட.

நாடாளுமன்றம் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம்

“நாடாளுமன்றம் எப்போது வேண்டுமானாலும் கலைக்கப்படலாம், ஆனால், அடுத்த நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படும் வரை அரசாங்கத்தின் விவகாரங்கள் தொடர வேண்டும். அதற்கு பிரதமர் மற்றும் தற்காலிக அமைச்சரவை நியமனம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் செய்யப்பட வேண்டும்.”

தற்போது தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களின் எண்ணிக்கை திஸாநாயக்கவுடன் மூன்று பேர் மட்டுமே, அவர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த பின்னர், 2020 இல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் மற்றுமொரு வேட்பாளர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார்.

எம்.பி பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவிப்பு

இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட நான்கு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையின் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என அவரிடம் வினவிய போது, ​​

“அமைச்சரவையில் அதிகபட்ச அமைச்சர்கள் இருக்கக்கூடிய விதிமுறைகள் உள்ளன. குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பற்றி அத்தகைய விதி எதுவும் இல்லை.

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக திஸாநாயக்க தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படவுள்ள தகவல்

“இதுபற்றி எனக்குத் தெரிவிக்கப்பட்டதும், ஒரு எம்பி பதவி காலியாக உள்ளதை தேர்தல் ஆணையத்திடம் (EC) தெரிவிப்பேன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திஸாநாயக்கவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளரை நியமித்து அவர்கள் (EC) அசாதாரண வர்த்தமானியை வெளியிடுவார்கள்.

எவ்வாறாயினும், அந்த வெற்றிடத்தை நிரப்பாமலேயே கூட ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்றார்.

NO COMMENTS

Exit mobile version