Home இலங்கை அரசியல் நாளை இந்தியா செல்லும் பிரதமர் ஹரிணி

நாளை இந்தியா செல்லும் பிரதமர் ஹரிணி

0

பிரதமர் ஹரிணி அமரசூரிய நாளையதினம்(16.10.2025) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த விஜயம், நாளை முதல் 18ஆம் திகதி வரை இடம்பெற உள்ளது. 

மோடி உடனான கலந்துரையாடல் 

தனது பயணத்தின் போது, ​​பிரதமர், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உயர் மட்டக் குழுவினருடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும், ஒக்டோபர் 17ஆம் திகதி, நடைபெறவுள்ள மாநாட்டில், பிரதமர் ‘நிச்சயமற்ற காலங்களில் மாற்றத்தை வழிநடத்துதல்’ என்ற கருப்பொருளில் உரையாற்ற உள்ளார். 

NO COMMENTS

Exit mobile version