நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் சரியான தன்மை மற்றும் அவை மக்களுக்குக் கிடைப்பதற்கு அரச அதிகாரிகளே பொறுப்பு என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களிலும், அரசாங்க அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உரிய தரப்பினருடன் நல்ல உரையாடலைக் கட்டியெழுப்பும் திறன் இருக்க வேண்டும் என்றும் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அமைச்சு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அநுர தலைமையிலான அரசாங்கம் அரச சேவைகளில் இறுக்கமான நடைமுறைகளை கடைப்பிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,