Home இலங்கை அரசியல் யுனெஸ்கோ மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை பிரதமர்

யுனெஸ்கோ மாநாட்டில் பங்கேற்கும் இலங்கை பிரதமர்

0

பிரதமர் ஹரிணி அமரசூரிய, யுனெஸ்கோ மாநாட்டில் பங்கேற்கவும், பிரான்ஸ்
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை
மேற்கொண்டுள்ளார்.

2025 ஏப்ரல் 1 இல் யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெறும், இலங்கையில் உள்ள
அனுராதபுர புனித நகரத்தின் உலக பாரம்பரிய சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான
ஒருங்கிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை மற்றும் அதனுடன் தொடர்புடைய வாழ்க்கை
பாரம்பரியம் என்ற தலைப்பிலான, சர்வதேச நிபுணர் மாநாட்டில் பிரதமர்
பங்கேற்கவுள்ளார்.

இலங்கையின் பிரதமர்

இந்த மாநாடு, யுனெஸ்கோவின் பணிப்பாளர் ஆட்ரி அசோலேயின் (Audrey Azoulay)
பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

யுனெஸ்கோ இலங்கையுடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில், மகத்தான கலாசார
மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான
அனுராதபுரத்தைப் பாதுகாப்பதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க முன்னணி
சர்வதேச நிபுணர்களும் இணைகின்றனர்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, இலங்கையின் பிரதமர், பிரான்ஸ் அரசாங்கத்தின் மூத்த
அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள
பகுதிகள் குறித்து விவாதிக்க உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version