Home இலங்கை அரசியல் தேர்தல் சட்டத்தை பிரதமர் மீறினாரா! விசாரணையை கோரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

தேர்தல் சட்டத்தை பிரதமர் மீறினாரா! விசாரணையை கோரும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

0

இலங்கையின் பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியுள்ளதாக,
இலங்கையின் முக்கிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு குற்றம்
சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் பெபரல் என்ற சுதந்திரமான
மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை, தேர்தல்கள் ஆணையகத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளது.

கோரிக்கை 

தனது கட்சியின் ஆதரவாளர்களை அமைதியான காலத்திலும் பிரசாரத்தில் ஈடுபடக் கூறி,
தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்துமாறு
தேர்தல் ஆணையகத்திடம் பெபரல் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையகத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு பெபரல்
கடிதம் எழுதியுள்ளது.

பிரதமர் அமரசூரிய, 2025 மே 3 ஆம் திகதி முதல் அமைதியான காலத்துக்குப் பிறகும்
தனது ஆதரவாளர்களை பிரசாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை
வெளியிட்டிருப்பதை தாம் கண்காணித்துள்ளதாக பெபரல் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் பிரதமரின் கருத்து, அவரது ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்தை மீற
ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்
என்று பெபரலின் நிர்வாக இயக்குநர் ரோஹண ஹெட்டியாராச்சி தனது கடிதத்தில்
குற்றம் சுமத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version