Home இலங்கை அரசியல் 396 பாடசாலை அதிபர்களை சந்தித்த பிரதமர்

396 பாடசாலை அதிபர்களை சந்தித்த பிரதமர்

0

Courtesy: Sivaa Mayuri

396 தேசிய பாடசாலைகளின் அதிபர்களை உள்ளடக்கிய விசேட செயலமர்வு கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்றுள்ளது.

குறித்த செயலமர்வு ஐந்து வருட இடைவெளியின் பின்னர் நேற்றையதினம் (28.09.2024) இடம்பெற்றுள்ளது.

பாடசாலை நிதி மேலாண்மை, உட்கட்டமைப்பு மற்றும் தேசிய பள்ளிகளின் மேற்பார்வையின் போது, அடையாளம் காணப்பட்ட பொதுவான சவால்கள் குறித்து இந்த நிகழ்வில் கவனம் செலுத்தப்பட்டது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்த செயலமர்வு தேசிய பாடசாலைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பு

இந்தநிலையில், நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், கல்வி முறையை அரசியலற்றதாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

கல்வியில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகும்.

அத்துடன், கல்வி சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். வேலைவாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், மதிப்பு சார்ந்த சமூகத்தை கட்டியெழுப்புவதையும் கல்வி நோக்கமாகக் கொண்டது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version