Home முக்கியச் செய்திகள் 10 வயது மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்த பாடசாலை அதிபர் கைது

10 வயது மாணவர்களுக்கு ஆபாச காணொளி காண்பித்த பாடசாலை அதிபர் கைது

0

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காண்பித்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் 57 வயதுடைய பாடசாலை அதிபர் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளி

தரம் 5 புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பாடசாலை சிறார்களுக்கு மேலதிக வகுப்பு நடத்துவதாக கூறி ஏறாவூர் பகுதியிலுள்ள பாடசாலைக்கு சுமார் 6 சிறார்களை வரவழைத்து சிறார்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக சிறார்கள் அவர்களது பெற்றோர்களிடம் கூறி பிரத்தியேக வகுப்பிற்கு செல்ல மறுத்துள்ளனர்.

காவல்துறையினர் கைது 

 இதனை தொடர்ந்து சம்பவ தினம் பெற்றோர் 119 காவல்துறை அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் அதிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/principal-arrested-obscene-film-to-students-1724305391?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version