Home இலங்கை சமூகம் சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

0

அதிபர் ஆசிரியர் சங்கத்தின் சம்பள முரண்பாட்டினைத் தீர்க்காது ரணில்
விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) இனவாத ரீதியிலான பிரச்சனைகள் முன்னெடுப்பதனை ஆசிரியர் சங்கம்
வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன்
தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (9) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..

மேலும், ரணில், ராஜபக்ச அரசாங்கம் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்தினை முடக்கியதாக  குறிப்பிட்டுள்ளார்.

சம்பள முரண்பாடு

இதன் போது, மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்களை பாதுகாத்துக் கொண்டு அதிபர்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்ப்பதற்கு முன்வரவில்லை என்றும் ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க எமது போராட்டம் தொடர்பாக தமிழ் பாடசாலைகளில் எவ்வித
போராட்டமும்
இடம்பெறவில்லை என தெரிவித்தார்.

இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து நமது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை
போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version