Home இலங்கை அரசியல் குட்டித் தேர்தல் : வாக்கு சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

குட்டித் தேர்தல் : வாக்கு சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று (23)அறிவித்துள்ளது.

மே 6 ஆம் திகதி தேர்தல்நடைபெற உள்ளது. மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை 25 மாவட்டங்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

425 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

336 உள்ளூராட்சி அமைப்புகளுக்கு மொத்தம் 2,900 குழுக்கள் வேட்புமனுக்களை சமர்ப்பித்தன, அவற்றில் 2,260 அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவை.

இருப்பினும், சுமார் 425 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version