Home முக்கியச் செய்திகள் சிறுமியிடம் அத்துமீறல் : குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

சிறுமியிடம் அத்துமீறல் : குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

0

Courtesy: Nayan

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் ரீதியிலான அத்துமீறலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டு நபருக்கு 8 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நட்டஈடு

இவ்வழக்கின் போது தண்டனை தொடர்பில் தனது சமர்ப்பணத்தில், அரச சட்டத்தரணி இக்குற்றத்தின் பாரதூரமான தன்மையையும், சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடுமையாக வலியுறுத்தினார்.

அரச சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றவாளிக்கு 8 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்டஈடாக 200,000 ரூபாயை நட்டஈடாக செலுத்துமாறும் கட்டளையிட்டார்.

NO COMMENTS

Exit mobile version