சிறைச்சாலையில் இருந்து விடுதலை பெற்ற நபரொருவரால் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டியில் பதிவாகியுள்ளது.
கண்டி (Kandy) – மஹிய்யாவை நகர சபை மைதானம் அருகே இந்தச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
நகர சபை மைதானம் அருகே தனது காரை நிறுத்திவிட்டு, வியாபார நிலையமொன்றுக்கு செல்ல முயன்ற நிலையில் குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
விடுதலையான நபர்..
இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்கான சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டி, பல்லேகல சிறைச்சாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றுவதாக தெரிய வந்துள்ளது.
மேலும், அவரைத் தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பப்பட்ட நபரும் சிறிது காலத்துக்கு முன்னர் பல்லேகல சிறைச்சாலையில் இருந்து விடுதலையான ஒருவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் சிறையில் இருந்த காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றின் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.