Home இலங்கை சமூகம் பொலிஸாரின் புதிய செயலி குறித்து எழுந்துள்ள சர்ச்சை

பொலிஸாரின் புதிய செயலி குறித்து எழுந்துள்ள சர்ச்சை

0

மோட்டார் போக்குவரத்து குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஈ-டிராபிக் என்ற பெயரில் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இந்த செயலியில் தகவல் வழங்குபவர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

போலிச் செய்திகள் குறித்த சிரேஸ்ட ஆய்வாளர் கலாநிதி சஞ்சன ஹெட்டுடுவா இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்கள்

பொலிஸ் திணைக்களத்தின் சமூக ஊடகங்கள் மீது அண்மையில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

தனது சமூக ஊடகத் தளங்களையே பாதுகாத்துக்கொள்ள முடியாத பொலிஸ் திணைக்களம் எவ்வாறு பொதுமக்களின் தனியுரிமைகளை பாதுகாக்கப் போகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொலிஸாரின் புதிய ஈ-டிராபிக் செயலி கூகுள் பிளேயில் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செயலியை பயன்படுத்துவோர் தகவல்களை வழங்குவோரின் தனிப்பட்ட தரவுகள் விபரங்கள் கசியக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version