Home முக்கியச் செய்திகள் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு: வெளியான மகிழ்ச்சி தகவல்

0

அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் தனியார் ஊழியர்களின் சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ (A. Anil Jayanta Fernando) தெரிவித்துள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளமாக இருந்த 17,500 ரூபாவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை நேற்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடும் எச்சரிக்கை

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரச துறையினருக்கான சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டது.

தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை 30,000 ரூபாய் வரையில் அதிகரிக்க கலந்துரையாடினோம்.

இதன்படி, 27,000 ரூபாய் குறைந்த பட்ச சம்பளமாக ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் வகையிலும், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அதனை 30,000 ரூபாய் வரையில் அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை, 30,000 ரூபாய் என்பது தற்போதைய பணவீக்க நிலைமையில் போதுமானது அல்ல.

சாதாரண வாழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொகை அவசியமாகும் எவ்வாறாயினும் பொருளாதாரத்தை நிலையாக்கி, உற்பத்திகளைப் பெருக்கியே அதனைச் செய்ய முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version