பிரியாமணி
நடிகை பிரியாமணி, முத்தழகாக இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.
பருத்திவீரன் படத்திற்கு பிறகு அவர் நிறைய படங்கள் நடித்தாலும் அவருக்கு இந்த படத்தை போல வேற எந்த படமும் பெரிய ரீச் கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
இவர் இப்போது விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் ஜனநாயகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜனநாயகன் படம் சூப்பர் ஸ்பெஷலாக இருக்கும், எனது கெரியரில் இது ஒரு சிறந்த படமாக இருக்கும் என பிரியாமணி கூறியுள்ளார்.
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ
டயட் டிப்ஸ்
இந்த நிலையில் பிரியாமணி ஒரு பேட்டியில் உடலை பிட்டாக வைக்க என்னென்ன செய்கிறார் என கூறியுள்ளார்.
அதில் அவர், ஜிம் ஒர்க்அவுட், யோகா செய்வதை அன்றாடம் தவறாமல் செய்வாராம்.
தினமும் காலை எழுந்தவுடன் 3 உலர்ந்த நெல்லிக்காய், ஒரு கை உலர் பழங்கள், Kadha எனப்படும் ஆயுர்வேத மூலிகை தேநீர் உட்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளாராம்.
3 நாட்கள் காலை உணவில் முசலி எனப்படும் ஓட்ஸ், பழங்கள், விதைகள் கலந்த உணவு, மீதி நாட்களில் தோசை, இட்லி அல்லது எப்மா சாப்பிடுவாராம்.
மதிய உணவில் புரதம் நிறைந்த ரொட்டி, தால், சாலட் சில நேரம் வேர்க்கடலை கிச்சடி அல்லது குழம்புடன் கவுனி அரிசி சாதம் சாப்பிடுவாராம்.
