Home இலங்கை அரசியல் கெஹலியவுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு! விசாரணைகள் ஆரம்பம்

கெஹலியவுக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு! விசாரணைகள் ஆரம்பம்

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கு தொடர்பான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

கெஹலிய ரம்புக்வெல்லவ அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் அந்த ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.   

மற்றுமொரு முறைப்பாடு

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கைக்கு தரமற்று மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டில் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு எதிராக மற்றுமொரு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சராக செயல்பட்ட காலத்தில் அமைச்சினால் வழங்கப்பட்ட இரண்டு உத்தியோகபூர்வ வாகனங்களை அவர் பதவி இழந்ததன் பின்னர் மீள ஒப்படைக்கவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை மீண்டும் ஒப்படைக்குமாறு பல தடவை கோரப்பட்ட போதிலும், அவை இதுவரை ஒப்படைக்கப்படவில்லை எனவும் குறித்த வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரான ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது” என தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version