தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் வரி குறைப்பு அல்லது வரிச்சலுகை வழங்கினால் 2028 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 15% என்ற நிலைக்கு அரச வருவாயை கொண்டு வருவது கடினம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த வருடம் முதல் வருமான வரி உள்ளிட்ட வரி வீதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு கடனுக்கான கடன் மற்றும் வட்டி தவணைகளை 2028 ஆம் ஆண்டு முதல் இலங்கை செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என அவர்கள் சுட்டிட்டிக்காட்டியுள்ளனர்.
அரச வருமானம்
இவ்வாறானதொரு பின்னணியில், வரி வருவாய் மேலும் குறைந்தால் கடனை அடைப்பது சவாலாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், நாட்டின் அரச வருமானம் 2028 ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 15% ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.