கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, சிவில் விமான சேவைகள், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விமான நிலைய வளாகத்தில் கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திலுள்ள பிரதான பிரச்சினையாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் போதிய வசதிகளை செய்து கொடுக்க முடியாத நிலை உள்ளது.
பல்வேறு யோசனைகள்
அதற்காக கடந்த காலங்களில் பல்வேறு யோசனைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட நெருக்கடிகள் காரணமாக 2023 ஆம் ஆண்டில் முடிக்கப்பட வேண்டிய முக்கிய திட்டங்களை நிறைவு செய்யவில்லை.
நாட்டில் பல விமான நிலையங்கள் இருந்தாலும், சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படைக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மிகவும் முக்கியமானதாகும்.
விரைவான தீர்வு
இதன்காரணமாக, பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும், எதிர்கால எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சர்வதேச விமான நிலைய அமைப்புகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு கலந்துரையாடி விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்த்த்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.