Home இலங்கை சமூகம் இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி

0

இலங்கையில் (Sri Lanka) வெலிமட பிரதேசத்தில் பச்சை மிளகாயை கொண்டு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஓரளவு பழுத்த பச்சை மிளகாய்களை கொண்டு இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொண்டு இவ்வாறு பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கலப்பு பச்சை மிளகாய்

வெலிமட பிரதேசத்தைச் சேர்ந்த ருவான் லங்காதிலக்க (Ruan Lankatilaka) என்ற நபர் இவ்வாறு ஐஸ்கிரீம் உற்பத்தி செய்துள்ளார்.

கொழும்பு 7 ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய விவகார மற்றும் ஆய்வு பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ருவான் லங்காதிலக்க, தனது இந்த ஐஸ் கிறீம் உற்பத்தியை விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவிடம் (Mahinda Amaraweera) அறிமுகம் செய்துள்ளார்.

அத்தோடு, கல்கிரியாகம மற்றும் வருணியா ஆகிய பச்சை மிளகாய் வகைகள் இரண்டையும் ஒன்றிணைத்து கலப்பு பச்சை மிளகாய் வகை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிளகாய் வகை

குறித்த பச்சை மிளகாய் வகையை பயன்படுத்தி ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டுப் பால், சீனி மற்றும் பச்சை மிளகாய் ஆகியனவற்றை பயன்படுத்தி இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய உற்பத்திக்கான காப்புரிமையை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் செய்துள்ளதாகவும் சிறிய யோகட் கப் அளவிலான ஐஸ் கிரீம் ஒன்றை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாகவும் ரூவான் லங்காதிலக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version