Home இலங்கை சமூகம் பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால்..! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால்..! அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

தங்கள் சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகளை வழங்கத் தவறியதால், நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை (26) தனது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால், நாளை மறுநாள் (27) காலை 08.00 மணிக்கு தொழில்துறை நடவடிக்கையைத் தொடங்குவதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

பேச்சுவார்த்தைகள் தோல்வி

நிறைவுகாண் மருத்துவ சேவையில் எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அரச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற மாணவர்களை சுகாதாரத் தொழில்களில் பணியமர்த்தாதது மற்றும் தற்போதுள்ள வெற்றிடங்கள் தீர்வுகளை வழங்கத் தவறியது உள்ளிட்ட பல பிரச்சினைகளின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடங்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version