Home இலங்கை சமூகம் தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி மரணம் : வெளியான அதிர்ச்சி தகவல்

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவி மரணம் : வெளியான அதிர்ச்சி தகவல்

0

வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி விடுதியில் உயிரிழந்த மாணவி கல்லூரியின் சில விரிவுரையாளர்களின் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலை எதிர்கொள்ள முடியாமல் தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக மாணவியின் தோழிகள் தெரிவித்துள்ளனர்.

பிங்கிரிய – வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவியே நேற்று முன்தினம் (23.05.2025) தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்டார். 

வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரியின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த களுத்துறை – வெலிகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சஞ்சீவனி குமாரி என்ற மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விரிவுரையாளர்களின் துன்புறுத்தல்

இந்த நிலையில் வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரியின் சில விரிவுரையாளர்களின் துன்புறுத்தலால் ஏற்பட்ட மன உளைச்சலை எதிர்கொள்ள முடியாமலேயே குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக மாணவியின் தோழிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், இச்சம்பவம் தொடர்பில், வயம்ப தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களும் நேற்று (24.05.2025) மௌனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதுபோன்ற மரணங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

சபரகமுவ பல்கலைக்கழக மாணவனின் உயிரிழப்பு சம்பவம் தணிவதற்கு முன் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version