Home இலங்கை சமூகம் இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பெருமளவு இலாபம் : வெளியான தகவல்

இலங்கை மின்சார சபைக்கு கிடைத்துள்ள பெருமளவு இலாபம் : வெளியான தகவல்

0

இலங்கை (Sri Lanka) மின்சார சபை இவ்வருடத்தின் முதல் அரையாண்டில் 119.20 பில்லியன் ரூபாய் (11,920 கோடி) இலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்ற 20.65 பில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 34.53 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார சபை

இது 67.2 வீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மின்சார சபையின் நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் (Sri lanka) மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/profit-received-by-ceb-from-electricity-tariff-1724163496

NO COMMENTS

Exit mobile version