Home முக்கியச் செய்திகள் விண்வெளியில் அணு ஆயுத தடை : ரஷ்யாயாவின் முடிவால் கடும் கோபத்தில் அமெரிக்கா

விண்வெளியில் அணு ஆயுத தடை : ரஷ்யாயாவின் முடிவால் கடும் கோபத்தில் அமெரிக்கா

0

விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையால் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரஷ்யா ரத்து செய்தது.

உலக நாடுகள் விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்தக் கூடாது என்பதை மீண்டும் உறுதி செய்துகொள்வதற்கான ஒப்பந்த வரைவுத் தீா்மானத்தை அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் கூட்டாகக் கொண்டுவந்தன.

ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி 

எனினும், சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை ரத்துசெய்தது.

இது குறித்து ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதுவர் வாஸிலி நெபன்ஸியா கூறுகையில், ‘விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுத்துவதைத் தடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1967-ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய தொழில்நுட்பம் : சிக்கப்போகும் பலர்

இந்த நிலையில், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தீா்மானம் அபத்தம் நிறைந்ததாக உள்ளது. அனைத்துவகை ஆயுதங்களையும் விண்வெளியில் நிறுத்துவதைத் தடை செய்வதற்கான அம்சம் அந்தத் தீா்மானத்தில் இடம்பெறவில்லை’ என்றாா்.

ரஷ்யா மீண்டும் முட்டுக்கட்டை

எனினும், தீா்மானத்தை ரத்து செய்ததன் மூலம் ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிக்கு ரஷ்யா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

தொடரும் போர் பதற்றம்! சீனாவுக்கு பயணம் செய்யவுள்ள விளாடிமீர் புடின்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

https://www.youtube.com/embed/LJObkv-683k

NO COMMENTS

Exit mobile version