Home முக்கியச் செய்திகள் யாழில் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க திட்டம்: டக்ளஸ் பணிப்பு

யாழில் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க திட்டம்: டக்ளஸ் பணிப்பு

0

யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை
நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda)  கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதிகளுக்கு தினமும்
வரும் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அவசர அவசிய தேவை கருதி நகரப்பகுதியில்
நவீன வசதிகளை கொண்ட பொது மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவினால் திட்டங்கள் முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய இன்றையதினம் (15) குறித்த
திட்டவரைபுகளை உறுதி செய்யும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 திட்டவரைபுகள் உறுதி  

இந்நிலையில்,  குறித்த மலசல கூட தொகுதியை அமைப்பதற்கான திட்டவரைபுகள் உறுதி செய்யப்பட்டதுடன் இந்த திட்டத்தை துரிதமாக முன்னெடுக்குமாறும் அமைச்சர் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த திட்டமானது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டமிடல்களை அடுத்து விரைவில்
நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில்  யாழ் மாநகர ஆணையாளர் , பொறியியலாளர்கள் அபிவிருத்தி
அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version