Home முக்கியச் செய்திகள் உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும் : யாருக்கு தெரியுமா…!

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும் : யாருக்கு தெரியுமா…!

0

நாளாந்தம் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வராது என்று கூறப்படுவதுண்டு. ஆனால், உடற்பயிற்சி செய்தாலும் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து வேலை செய்பவர்களுக்கு அதிகளவில் மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் நீண்டநேரம் இருந்து வேலை 

அண்மையில், அமெரிக்க கல்லூரி ஆய்வாளர்கள் 90,000 பேர்களிடம் ஆய்வு மேற்கொண்டபோது, பிற வேலைகளை செய்யும் நபர்களை விட ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் நபர்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதனால், இவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்தாலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

பல்வேறு நோய்கள்

எனவே, 10 மணி நேரத்திற்கு மேல் உட்கார்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் வேலையை தொடர வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும், நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அமர்ந்து வேலை செய்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடும். இதனால், இதய நோய் மட்டுமன்றி சர்க்கரை நோய், கழுத்து வலி, தோள்பட்டை வலி மற்றும் கால் நரம்பு பிரச்சனைகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version