Courtesy: Sivaa Mayuri
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் செப்டம்பர் 18 அன்று முடிவடையவுள்ளன. இதனையடுத்து 48 மணிநேர அமைதியான காலம் ஆரம்பமாகிறது.
அத்துடன் 21ஆம் திகதியன்று வாக்களிப்பு இடம்பெறவுள்ள அதேநேரம் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு செப்டெம்பர் 4,5,6,11 மற்றும் 12 ஆகிய ஐந்து நாட்களில் நடைபெறவுள்ளன.
தேர்தல் விஞ்ஞாபனங்கள்
இதற்கு முன்னதாக, தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவதில் வேட்பாளர்கள் மும்மூரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் அவர்கள் பல்வேறு உறுதிமொழிகளை அளிப்பாளர்கள் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், அவர்களின் பிரசாரத்திற்கு இன்னும் 34 நாட்களே உள்ளன.
இதேவேளை 39 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
எனினும் 6 வேட்பாளர்கள் மாத்திரமே பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக தேர்தல் அத்துமீறல்களை கண்காணிக்கும் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.