Home இலங்கை சமூகம் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்ட யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர்

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்ட யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர்

0

யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட
தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக
சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள்
ஆணைக்குழுவினால் 2024.07.01ஆந் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின்
விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அரசாங்க அதிபர்

மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக கடந்த 04.07.2024 அன்று தனது கடமைகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் பிரதமர் அலுவலகத்தில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக ம.பிரதீபனுக்கான நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/promoted-jaffna-district-deputy-governor-1728421957

NO COMMENTS

Exit mobile version