Home இலங்கை பொருளாதாரம் 2025இன் முதல் காலாண்டில் நடைமுறைக்கு வரவுள்ள உத்தேச சொத்து வரி

2025இன் முதல் காலாண்டில் நடைமுறைக்கு வரவுள்ள உத்தேச சொத்து வரி

0

Courtesy: Sivaa Mayuri

உத்தேச சொத்து வரியானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பின்னர் நடைமுறைக்கு வரும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல (Ruwanwella) பிரதேசத்தில் இன்று (22.06.2024) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 

“2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குப் பின்னர் உத்தேச சொத்து வரி நடைமுறைக்கு வரும். இது 90 சதவீதம் சாதாரண மக்களை பாதிக்காது. 

மறைமுக வரி 

உலகளவில் பல நாடுகளில் இந்த வரி நடைமுறைபடுத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னர் முன்னாள் நிதி அமைச்சர் என்.எம். பெரேரா, இது மிகவும் முற்போக்கான திட்டம் என வர்ணித்திருந்தார். 

ஆனால், இந்த வரி நடைமுறைபடுத்தப்பட்ட பின் எதிர்காலத்தில் சாதாரண மக்கள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியின் அளவு குறையும்.

அத்துடன் இந்த வரியின் மூலம் அனைவரும் பயன்பெற முடியும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version