Home இலங்கை அரசியல் தமிழர் பகுதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

தமிழர் பகுதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடை உத்தரவு!

0

வவுனியா (Vavuniya) நகரில் நாளையதினம் ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு
காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்த நால்வருக்கு தடை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில்
கலந்துகொள்வதற்காக நாளையதினம்(1) வவுனியா வருகைதரவுள்ள நிலையில் வவுனியா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறையினரால் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்ட விண்ணப்பத்தின்
பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு
நீதிமன்றம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

 தடைஉத்தரவு

அந்தவகையில் வவுனியா வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சிவாநந்தன்
ஜெனிற்றா, தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்சங்கத்தின் இணைப்பாளர்
கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார், அந்த சங்கத்தின் தலைவிகாசிப்பிள்ளை ஜெயவனிதா,
மற்றும் காணாமல்போன அமைப்பைசேர்ந்த சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே குறித்த
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்
வகையில் நாளையதினம் 01.09.2024 காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00
மணிவரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு குற்றவியல் படிமுறைக்கோவையின் பிரிவு 106(01) இன் கீழ் தடை
விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடைஉத்தரவு பத்திரங்கள் அந்தந்த பிரிவுகளைசேர்ந்த காவல்துறையினரால்
அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version