Home இலங்கை அரசியல் அநுர மீதுள்ள புலம்பெயர் தமிழர்களின் கோபம்! லண்டனில் வெடித்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சியின் காரணம்

அநுர மீதுள்ள புலம்பெயர் தமிழர்களின் கோபம்! லண்டனில் வெடித்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சியின் காரணம்

0

புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செய்து கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை அல்லது அதற்கான முன்னெடுப்பு ஆமை வேகத்தில் செல்வதற்கு எதிராக காட்டப்பட்ட எதிர்ப்பே லண்டன் போராட்டம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  

ஜனாதிபதியின் ஐரோப்பிய பயணம்  

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று புலம்பெயர் தமிழ் மக்களிடம் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அச்சந்தர்ப்பத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினார் என்று எமக்கு தெரியாது.

அரசாங்கம் வடக்கு – கிழக்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு மற்றும் காணி விடுவிப்பு தொடர்பில் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசின் செயற்பாடுகள் மந்த கதியிலும் எதிர்பார்க்கப்படும் வெளிப்பாடுகள் இல்லாமை போன்றவை  லண்டன் ஆர்ப்பாட்டத்துக்கு காரணமாக இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். 

    

NO COMMENTS

Exit mobile version